News September 28, 2025

கரூர் துயரம்: 40 பேர் மரணத்தில் நீடிக்கும் மர்மம்

image

கரூரில் கூட்ட நெரிசல் மரணங்களை, இதற்குமுன் நடந்த நெரிசல் மரணங்களுடன் ஒப்பிட்டு SM-ல் கேள்வி எழுப்பப்படுகிறது. *பெங்களூரு RCB கொண்டாட்டத்தில் 2.5 லட்சம் பேர் கூடினர்; உயிரிழப்பு 11 பேர். *சென்னை ஏர் ஷோவில் 15 லட்சம் பேர் கூடினர்; 5 பேர் பலி. *1992-ல் மகாமகத்தில் 5 லட்சம் பேர் கூடினர்; 50 பேர் பலி. *கரூரில் 27,000 பேர் மட்டுமே கூடினர்; 40 பேர் பலி. இந்த அளவுக்கு பலி எண்ணிக்கை உயரக் காரணம் என்ன?

Similar News

News September 28, 2025

இனி மாதந்தோறும் ₹1,500.. புதிய அப்டேட்

image

பணியாளர் வைப்பு நிதி(EPFO) அமைப்பு, விரைவில் அதன் புதிய தளமான EPFO 3.0-ஐ அறிமுகம் செய்யவுள்ளது. PF கணக்கு வைத்திருப்போர் ATM-ல் பணம் எடுக்கும் வசதி, PF கணக்கை UPI-யுடன் இணைப்பது, எளிதான கிளெய்ம் உள்பட பல புதிய அம்சங்கள் இதில் இருக்கும். மேலும், அக்.10-11 தேதிகளில் நடைபெறும் கூட்டத்தில், PF பென்ஷன்தாரர்களின் குறைந்தபட்சம் பென்ஷன், ₹1500–₹2000 ஆக உயர்த்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

News September 28, 2025

BREAKING: விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

image

சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால், மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக, கரூரில் நேற்று அவரது பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் கட்சி தொண்டர்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர். இதனால், அவரது வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

News September 28, 2025

IND பவுலர்களை சோதிக்கும் பாக்., பேட்ஸ்மென்

image

பேட்டிங்கில் களமிறங்கிய பாகிஸ்தான், 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்துள்ளது. ரசிகர்களின் பெரும் ஆரவாரத்துடன் போட்டி தொடங்கியதும், முதல் ஓவரை சிறப்பாக வீசிய ஷிவம் துபே, 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால், பாக்., பேட்டிங்கை இந்திய பவுலர்கள் கட்டுப்படுத்துவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாக்., அணி கவனமாக விளையாடி வருகிறது. முதல் விக்கெட்டை யார் வீழ்த்துவார்?

error: Content is protected !!