News September 28, 2025
புதுக்கோட்டை: கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பரமந்தூர் கல்லனேந்தல் கல்லூரி அருகே இன்று மதியம் சாலையோர பள்ளத்தில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் உயிர் தப்பினர். இதே இடத்தில் தெடர்ச்சியாக விபத்துகள் நடந்து கொண்டே உள்ளது. இந்த இடத்தில் முறையான அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News October 30, 2025
புதுக்கோட்டை: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

புதுக்கோட்டை மக்களே.. இனி Gpay, Phonepe, paytm தேவை இல்லை. இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த இண்டர்நெட் தேவை இல்லை. இதனை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News October 30, 2025
புதுக்கோட்டை: உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ?

புதுகை மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். <
News October 30, 2025
புதுகை: மாணவிக்கு பிறந்த குழந்தை – வாலிபர்கள் கைது

விராலிமலை அருகே மதயானைப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (25), வடக்கன்வயலை சேர்ந்த சிவசூரியா (20) ஆகியோர் சேர்ந்து 11-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் அந்த மாணவி கர்ப்பமானார். இந்நிலையில் திடீரென 8-வது மாதத்திலேயே அந்த மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்த புகாரில் அனைத்து மகளிர் போலீசார் 2 வாலிபர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


