News September 28, 2025
கரூரில் நடந்தது என்ன? கலெக்டர் விளக்கம்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கிய 110 பேர் அரசு, தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தங்கவேலு தெரிவித்துள்ளார். பெரும் அசம்பாவிதம் நடந்த உடனேயே மீட்பு பணிகளை முதலமைச்சர் முடுக்கிவிட்டதாக கூறிய அவர், அரசின் உடனடி நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ உதவிமையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News September 28, 2025
மகளிர் உரிமைத்தொகை.. அமைச்சர் புதிய அறிவிப்பு

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு விரைவில் ₹1,000 வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஒட்டன்சத்திரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், TN-ல் இதுவரை 20 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 52 மாதங்களில் 3,000 ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டு முழுநேரம், பகுதிநேர கடைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
News September 28, 2025
ரஜினியை வம்புக்கு இழுக்கும் நெட்டிசன்ஸ்

விஜய்யின் அரசியல் பயணத்தில், நேற்று நடந்த துயர சம்பவம் அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களுக்கு கொள்கை முக்கியமல்ல, தங்கள் நாயகனை ரசிப்பது மட்டுமே முதன்மை. அதனாலேயே நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறினாலும், ரசிகர்கள் ரசிகர்களாகவே தொடர்கின்றனர். இதை நன்கு உணர்ந்ததால் தான், பழுத்த அனுபவம் கொண்ட கட்சிகளுடன் எதற்கு போட்டி என ரஜினி ஒதுங்கிவிட்டதாக நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
News September 28, 2025
IND vs PAK போட்டியை பார்க்க கூடாது: உத்தவ்

தேசப்பற்று உள்ளவர்கள் IND vs PAK இறுதிப்போட்டியை காண்பதை தவிர்க்க வேண்டும் என உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார். கடினமான நிலப்பரப்பில் இந்திய ராணுவத்திற்கு சோலார் டெண்ட் அமைத்து கொடுத்து உதவிய சோனம் வாங்சுக், தேச துரோகி எனக் கூறி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், தீவிரவாதத்தில் ஈடுபடும் பாகிஸ்தான் உடன் விளையாடுவது எந்த வகையான தேசப்பற்று என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.