News September 28, 2025
கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ₹11 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் அனைத்து கர்ப்பிணிகளுக்கும், கருவுற்றது முதல் குழந்தை பிறந்தது வரை என 3 தவணைகளில் பணம் வழங்கப்படும். இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க https://pmmvy.wcd.gov.in இணையதளத்தை பார்வையிடுங்கள். இந்த முக்கிய திட்டத்தை அனைவரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.
Similar News
News September 28, 2025
அரசுக்கு கூட்டத்தை கையாள தெரியவில்லை: அண்ணாமலை

திமுக அரசுக்கு கூட்டத்தை கையாள தெரியாமல் விஜய் மீது பழியை போட விரும்புவதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். விஜய்யை காண சிறிய இடத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதே நெரிசலுக்கு காரணம் என காவல்துறை கூறுவதை ஏற்க முடியாது என்றார். அப்படி எனில், சென்னை மெரினாவில் கடந்தாண்டு நடந்த ஏர் ஷோவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி, 5 பேர் பலியானது ஏன்? என கேள்வி எழுப்பினார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
News September 28, 2025
மோடியால்தான் iPhone காவி நிறத்துக்கு மாறியது: சுதான்ஷூ

அண்மையில் வெளிவந்த iPhone 17 சீரியஸில் புதிதாக Cosmic Orange கலரும் இணைக்கப்பட்டிருந்தது. இதனை பலரும் காவி கலர் எனக் கூறிவர, இதுகுறித்த பாஜக MP’யின் கருத்து வைரலாகி வருகிறது. உ.பி.யின் காசியாபாத்தில் பேசிய சுதான்ஷூ திரிவேதி, உலக அரங்கில் PM மோடிக்கு இருக்கும் செல்வாக்கின் அடிப்படையில்தான், iPhone காவி நிறத்தில் வெளிவந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவரின் கருத்து குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க?
News September 28, 2025
மனைவி, குழந்தைகளை மிஸ் செய்கிறேன்: அஜித்குமார்

ஷாலினி மட்டும் இல்லையென்றால், தன்னால் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது என அஜித்குமார் தெரிவித்துள்ளார். குழந்தைகள், குடும்பத்தை கவனித்து கொள்வது எளிதான காரியம் அல்ல. ரேஸிங், ஷூட்டிங் என எப்போதும் வெளியில் இருப்பதால், குடும்பத்தை மிகவும் மிஸ் பண்ணுவதாகவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும், வாழ்க்கையில் எதையாவது அடைய விரும்பினால், சில தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.