News April 14, 2024
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவிப்பு

கரூர் புலியூர், எம்.ஏ.எம் ராமசாமி செட்டியார் அரசு உயர்நிலைப் பள்ளி எதிரே மாநகராட்சி மண்டலம் 3-க்கு விநியோகிக்கப்படும் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே வார்டு எண் 15, 16, 38, 39, 40, 41 மற்றும் 42 பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகத்தில் கால தாமதம் ஏற்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தனர்.
Similar News
News August 13, 2025
நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கரூர் மாவட்டத்தில் நாளை (14.08.25) திருமா நிலையூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதிவாய்ந்த விடுபட்ட மகளிர் பயன் பெற, சாதி சான்று பெற, பட்டா மாற்றம் செய்ய, பென்சன் வாங்க, மருத்துவ காப்பீடு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய. ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் செய்ய போன்ற பல கோரிக்கைகளை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 13, 2025
கரூர்: 500 அரசு உதவியாளர் வேலை: APPLY NOW

கரூர் மக்களே மத்திய அரசின் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.<
News August 13, 2025
கரூரில் ரூ.76,380 சம்பளம்: கூட்டுறவு சங்கத்தில் வேலை !

கரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் மேற்பார்வையாளர் என 30 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.76,380 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <