News April 14, 2024
ஆட்சியர் அலுவலகத்தில் தபால் வாக்கு பதிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 19ம் தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாக்கு பதிவு மையத்தில் நடைபெற்றது. இதை ஆட்சியர் வளர்மதி மற்றும் மாவட்ட காவல் SP கிரண் ஸ்ருதி ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாவட்ட எஸ்.பி தனது வாக்கினை பதிவு செய்தார்.
Similar News
News July 10, 2025
விவசாயிகளுக்கு விரைவில் நெல்லுக்கான தொகை கிடைக்கும்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெல்லுக்கான தொகையை வங்கிக் கணக்கிற்கு வராத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4ஆம் தளத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளரை, அலுவலக வேலை நாட்களில் அணுகலாம் என்று கலெக்டர் ஜெ. யூ. சந்திரகலா அறிவித்துள்ளார். மேலும் இதன் மூலம் நெல்லுக்கான தொகை விரைவில் கிடைக்க வழிவகுக்க செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
News July 10, 2025
மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் குறித்த அறிவிப்பு

மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், வரும் ஜூலை 15 அன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தை தொடங்கி வைக்கிறார் என்று தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இம்முகாம்கள் அக்டோபர் மாதம் வரை நடைபெறும். முகாம் நடைபெறும் நாட்களில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் முகாமில் மட்டுமே வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
News July 10, 2025
தென்னிந்தியாவின் முதல் ரயில் சேவை

தென்னிந்தியாவின் முதல் பயணிகள் ரயில் சேவை 1856 ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று சென்னை ராயபுரத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்தின் வாலாஜா சாலை வரை இயக்கப்பட்டது. இது சுமார் 60 மைல் தூரம் கொண்டது. இது அன்றைய மெட்ராஸ் கவர்னர் ஹாரிஸ் பிரபுவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த முதல் ரயிலில் ஆளுநர் ஹாரிஸ் மற்றும் சுமார் 300 ஐரோப்பியர்கள் பயணித்தனர். வரலாற்றில் ராணிப்பேட்டைக்கு ஒரு சிறப்பு இடத்தைக் கொடுக்கிறது.ஷேர்