News April 14, 2024
சோடா தயாரித்து வாக்கு சேகரிப்பு

பாஜக சார்பில் போட்டியிடும் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் எஸ் ஜி எம் ரமேஷ் கோவிந்த் திருத்துறைப்பூண்டி நகர் பகுதி மற்றும் ஒன்றிய பகுதிகளில் நேற்று தீவிர
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது நெடும்பலம் பகுதியில் உள்ள சோடா கம்பெனியில் சோடா தயாரித்து கொடுத்து அங்கு வேலை பார்த்தவர்களிடம் நூதன வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Similar News
News October 22, 2025
திருவாரூர்: இந்திய அஞ்சல் துறையியில் வேலை

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க…
News October 22, 2025
திருவாரூர்: நீரில் மூழ்கிய 5000 ஏக்கர் சம்பா!

நன்னிலம், திருக்கண்டீஸ்வரம், தூத்துக்குடி, மணவாளம்பேட்டை, அதம்பாவூர், அச்சுதமங்கலம், சரபோஜிராஜபுரம், வெள்ளை அதம்பார், மருவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகத் தொடங்கி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News October 22, 2025
திருவாரூர்: மழையால் இடிந்து விழுந்த 4 வீடுகள்!

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக, திருவாரூர் மாவட்டாரம் பெருங்குடி கிராமத்தில் தெற்கு தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. மேலும் அதே பகுதியில் ஜெயபாரதி, சுபஸ்ரீ, செல்வமணி ஆகிய 3 பேரின் கூரை வீட்டின் சுவர்களும் இடிந்து விழுந்தன. இந்த விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன.