News September 28, 2025
கரூர் துயரம்: நிதியுதவி அறிவித்தார் PM மோடி

கரூர் துயரத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு PM மோடி தலா ₹2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். காயம் அடைந்தோருக்கு ₹50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விஜய் ₹20 லட்சம், தமிழக அரசு ₹10 லட்சம் அறிவித்துள்ள நிலையில் தற்போது PM-ன் ₹2 லட்சம் சேர்த்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹32 லட்சம் நிதியுதவி கிடைக்கும்.
Similar News
News September 28, 2025
BREAKING: தமிழகம் முழுவதும் நாளை இயங்காது

கரூர் பிரசாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை(செப்.29) மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என தமிழக வணிகர் சங்கர் பேரவை அறிவித்துள்ளது. நாளை மாலை 6 மணி வரை கடைகள் அடைக்கப்படும் எனவும் அத்தியாவசிய தேவைகளுக்காக மெடிக்கல், பால் உள்ளிட்ட கடைகள் திறந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கரூர் துயர சம்பவத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். SHARE IT.
News September 28, 2025
விஜய்க்கு எதிராக பாதிக்கப்பட்டவரே வழக்கு

தவெக பரப்புரைக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்த செந்தில் கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கை தாக்கல் செய்துள்ளார். முறையான பாதுகாப்பு இல்லாமல் இனி தவெக கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கு இன்று மாலை விசாரணைக்கு வருகிறது.
News September 28, 2025
விசாரணை ஆணையத்தின் அதிகாரங்கள் என்னென்ன? (1/2)

➤மத்திய-மாநில அரசின் எத்தகைய உயர் பொறுப்பில் உள்ளவர்களையும் விசாரிக்க ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. ➤அரசின் எந்த ஒரு ஆவணத்தையும் கேட்டு பெற முடியும். ➤விசாரணைகளை நடத்தி குற்றத்தை கண்டறியும்பட்சத்தில், அது தொடர்பான பரிந்துரைகளை அரசுக்கு வழங்க முடியும் ➤ஆனால் குற்றவாளிகள் என ஆணையம் சுட்டிக்காட்டும் நபர்களுக்கு தண்டிக்க முடியாது. ➤ஆணையத்தின் அறிக்கையை சட்டமன்றத்தில் அரசு தாக்கல் செய்யும்.