News April 14, 2024
ரயில் கழிவறை குழாய்களை திருடியவர்கள் கைது

மதுரை கோட்டத்தில் இயங்கும் ரயில்களில் உள்ள கழிவறை குழாய்கள் அடிக்கடி திருடு போனதால், ரயில்வே போலீசார் கண்காணித்தனர். அதன்படி நேற்று சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த கோ.புதூர் ஆனந்தன், செல்வம் ஆகியோரை சோதனை செய்தனர். சோதனையில், அவர்கள் மது அருந்துவதற்காக கடந்த 2 ஆண்டுகளாக கழிவறை குழாய்களை திருடியது தெரிந்தது. இவர்கள் உட்பட குழாய்களை விலைக்கு வாங்கிய கடைக்காரர்கள் என 4 பேர் கைது செய்யப்பட்டனர்
Similar News
News September 16, 2025
மதுரை: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வேயில் சூப்பர் வேலை..!

ரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️ கல்வி தகுதி: Any Degree
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.09.2025
▶️ ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.10.2025
விண்ணப்பிக்க<
News September 16, 2025
மதுரையில் சும்மா கிடக்கும் ரூ.100 கோடியில் கட்டப்பட்ட அரங்கம்

அலங்காநல்லுார் அருகே கீழக்கரையில் ரூ.100 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் வருமானத்திற்கு வழியின்றி பராமரிப்பது சிரமமாக உள்ளது. வாகன வசதியுள்ளோர் மட்டும் சனி, ஞாயிறுகளில் ஜல்லிக்கட்டு அரங்கு வந்து செல்கின்றனர். மற்ற நாட்களில் காற்றாடுகிறது. இதற்கு பார்வையாளர் கட்டணமும் நிர்ணயிக்கவில்லை. பூட்டிக் கிடக்கும் கூட்ட அரங்குகளை வாடகைக்கு விடும் திட்டமும் முழுமையாக செயல்படவில்லை.
News September 16, 2025
மதுரை தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்

மதுரை, பார்க் டவுனைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 52. முனிச் சாலையில் பார்ட்னர் கல்லாணை, 50, என்பவருடன் பார்சல் சர்வீஸ் தொழில் செய்தார். கடந்த 12ம்தேதி இரவு நடு ரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.போலீஸ் விசாரணையில் பார்ட்னர் கல்லாணை ‘பார்சல் சர்வீஸ்’ தொழிலை தனி ஒருவனாக நடத்த திட்டமிட்டு, கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. கல்லாணை உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.