News September 28, 2025

BREAKING: நிதியுதவி அறிவித்தார் விஜய்

image

கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்களுக்கு தவெக தலைவர் விஜய் நிதியுதவி அறிவித்துள்ளார். உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ₹20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹2 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Similar News

News September 28, 2025

PHOTO GALLERY: காதலனை கரம் பிடித்தார் செலினா கோமஸ்

image

உலகளவில் பிரபலமான அமெரிக்க பாடகி செலினா கோமஸ், தனது நீண்ட நாள் காதலனான பென்னி பிளாங்கோவை கரம் பிடித்தார். தங்களது திருமண புகைப்படங்களை செலினா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியில் உலக பிரபலங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக, பிரபல பாடகர்களான ஜஸ்டின் பீபர் மற்றும் வீக்கெண்ட் ஆகியோரை செலினா டேட் செய்திருந்தார்.

News September 28, 2025

கரூர் துயரம்: போலீசார் கூறுவது இதுதான்

image

*கூட்டம் நடந்த இடத்திற்கு விஜய் 5 மணி நேரம் தாமதமாக வந்துள்ளார். *பஸ்ஸின் முன் சீட்டில் அமர்ந்திருந்த அவர், லைட்டை ஆஃப் செய்துவிட்டு உள்ளே சென்றதால், சாலை நெடுக இருந்த மக்கள், கூட்டம் நடந்த இடத்திற்கு முண்டியடித்து சென்றனர். *10,000 பேருக்கு தவெக அனுமதி கேட்டிருந்த நிலையில், 27,000 பேர் கூடினர். *கூட்டத்தை ஒழுங்குபடுத்த தன்னார்வலர்கள், மருத்துவக்குழு, குடிநீர் இல்லை.

News September 28, 2025

கரூர் துயரத்திற்கு காங்கிரஸ் சார்பில் ₹1 கோடி நிவாரணம்

image

கரூர் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் உடல்களுக்கு TNCC தலைவர் செல்வப்பெருந்தகை, MP ஜோதிமணி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ₹1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்றார். மேலும், துக்கம் அனுசரிக்கும் விதமாக காங்., கட்சி 3 நாள்களுக்கு நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளது.

error: Content is protected !!