News September 28, 2025
அரியலூர் மாவட்டத்தின் தனிச்சிறப்பு இதுதான்!

சுண்ணாம்புக் கல், மணல் கற்கள், பாஸ்பேட் முண்டுகள் மற்றும் சில கனிமங்கள் அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிறைந்து கிடைக்கின்றன. குறிப்பாக சுண்ணாம்புப் படிமங்கள், அரியலூர், செந்துறை ஆகிய வட்டங்களில் மிகுதியாக காணப்படுகின்றன. அதுபோல ஜெயங்கொண்டம் பகுதி பழுப்பு நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் செறிந்த பகுதியாக கருதப்படுகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News January 22, 2026
அரியலூர்: 21 புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

அரியலூர் மாவட்டத்தில், KMS 2025−26-ஆம் ஆண்டு சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை, கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக ஓலையூர், விழுதுடையான், பெரியாத்துகுறிச்சி, விளந்தை, காடுவெட்டி, கங்கைகொண்ட சோழபுரம், சோழமாதேவி, இடங்கண்ணி, தென்கச்சி பெருமாள்நத்தம், வாழைக்குறிச்சி, காரைக்குறிச்சி உள்ளிட்ட 21 கிராமங்களில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கபட உள்ளது. என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
அரியலூர்: ATM-வில் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

அரியலூர் மக்களே ATM-யில் பணம் எடுக்கும் போது, பணம் வரமாலே பணம் எடுத்ததாக உங்கள் மொபைலுக்கு மெசேஜ் வருகிறதா? கவலைவேண்டாம். அதற்கான ரசித்து இருந்தாலே போதும், அருகில் உள்ள உங்களது வாங்கி கிளைக்கு சென்று புகாரளிக்கலாம். பின்னர் நீங்கள் புகாரளித்த அடுத்த 5 வேலை நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். அப்படி தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.100 சேர்த்து அளிக்கப்படும். SHARE IT.
News January 22, 2026
அரியலூர் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்!

அரியலூர் வழியாக தாம்பரம்-திருவனந்தபுரம் இடையே புதிதாக அம்ரித் பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அரியலூர் ரயில்நிலையத்தில் இரவு 7.33 மணிக்கு வந்தடையும். மேலும் வாராந்திர சிறப்பு ரயிலானது, வருகிற ஜன.23-ஆம் தேதி திருவனத்தபுரம் சென்ட்ரல் ரயில்நிலையத்தில் கொடியசைத்து தொடக்கி வைக்கப்படும் என்று, திருச்சி கோட்ட தெற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


