News September 28, 2025
BREAKING: விஜய் வீட்டில் போலீஸ், துணை ராணுவம்

விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தவெக தொண்டர்கள் அங்கு வந்த நிலையில், தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தவெகவினர் உள்ளிட்ட யாருக்கும் விஜய் வீட்டிற்குள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் அவ்வழியாக செல்வோர் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. துணை ராணுவமும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
Similar News
News September 28, 2025
கரூர் துயரம்: போலீசார் கூறுவது இதுதான்

*கூட்டம் நடந்த இடத்திற்கு விஜய் 5 மணி நேரம் தாமதமாக வந்துள்ளார். *பஸ்ஸின் முன் சீட்டில் அமர்ந்திருந்த அவர், லைட்டை ஆஃப் செய்துவிட்டு உள்ளே சென்றதால், சாலை நெடுக இருந்த மக்கள், கூட்டம் நடந்த இடத்திற்கு முண்டியடித்து சென்றனர். *10,000 பேருக்கு தவெக அனுமதி கேட்டிருந்த நிலையில், 27,000 பேர் கூடினர். *கூட்டத்தை ஒழுங்குபடுத்த தன்னார்வலர்கள், மருத்துவக்குழு, குடிநீர் இல்லை.
News September 28, 2025
கரூர் துயரத்திற்கு காங்கிரஸ் சார்பில் ₹1 கோடி நிவாரணம்

கரூர் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் உடல்களுக்கு TNCC தலைவர் செல்வப்பெருந்தகை, MP ஜோதிமணி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ₹1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்றார். மேலும், துக்கம் அனுசரிக்கும் விதமாக காங்., கட்சி 3 நாள்களுக்கு நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளது.
News September 28, 2025
BCCI தலைவரானார் மிதுன் மன்ஹாஸ்!

மும்பையில இன்று நடந்த ஆண்டு கூட்டத்தில், BCCI தலைவராக மிதுன் மன்ஹாஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். IPL-ல் டெல்லி, புனே, சென்னை அணிகளுக்காக மிதுன் விளையாடியுள்ளார். ரஞ்சி டிராபியில் டெல்லி கேப்டனாகவும் இருந்துள்ளார். கடைசியாக ஜம்மு & காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக செயல்பட்டார். அதேபோல், இன்றைய பொதுக்கூட்டத்தில் ராஜீவ் சுக்லா, BCCI துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.