News September 28, 2025
கிருஷ்ணகிரி: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

கிருஷ்ணகிரி மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. SHARE பண்ணுங்க.
Similar News
News October 16, 2025
கிருஷ்ணகிரி மக்களே நாளை மிஸ் பண்ணிடாதீங்க

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி வரும் அக்.17ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 10th,12th, டிப்ளமோ, ஐடிஐ முடித்தோர், மற்றும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 04343-291983 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். *நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*
News October 16, 2025
கிருஷ்ணகிரியில் இப்படி ஒரு இடமா!

கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி அருகே மல்லச்சந்திரம் மோரல்பாறையின் மீது கற்திட்டைகள் உள்ளன. இவை இறந்தவர்களின் நினைவாக சுமார் 2000-3000 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டிருக்கலாம் என தொல்லியல் துறையினர் கருதுகின்றனர். இவை 1மீ முதல் 2.6மீ வரை உயரம் கொண்டதாக உள்ளது. இவற்றில் சில ஓவிங்களும் காணப்படுகின்றன. நம்ம ஊரில் இப்படி ஒரு இடம் இருப்பது பலருக்கும் தெரியவில்லை. ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News October 16, 2025
கிருஷ்ணகிரி: உங்க ஆதார் கார்டை வேறுயாராவது யூஸ் பண்றாங்களா?

உங்கள் ஆதார் கார்டினை வேறு யாராவது தவறாக பயன்படுத்தினால் UIDAI என்ற இணையத்தில் ஆதார் சேவைகளுக்கு (Aadhaar Services) என்பதை கிளிக் செய்து, ஆதார் அங்கீகார வரலாற்றை (Aadhaar Authentication History) தேர்ந்தெடுத்து, ஆதார் எண், மொபைல் எண், OTP எண்ணை பதிவிட்டு கண்டுபிடிக்கலாம். 1947 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இ-சேவை மையங்களில் நேரடியாகவும் சென்று கேட்கலாம். ஷேர் செய்யுங்கள்