News September 28, 2025
திருச்சி: விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் பரிசு அறிவிப்பு

தமிழகத்தில் சிறுதானியங்கள், பயறு வகைகள், கரும்பு ஆகியவை சாகுபடி செய்து மாநிலத்தில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.2.50 லட்சம், 2-ம் பரிசாக ரூ.1.50 லட்சம், 3-ம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 25, 2026
த.வெ.க வில் இணைந்த முன்னாள் அமைச்சர்

திருச்சி வயலூர் சாலையை பூர்வீகமாக கொண்டவரும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழிகாட்டுதல்படி வலம் வந்தவரும், அதிமுக அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக பணியாற்றிய கு.ப. கிருஷ்ணன் இன்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் அணியில் இருந்துவந்த இவர் இன்று தமிழக தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
News January 25, 2026
திருச்சி டிஎஸ்பிக்கு விருது: சமூக ஆர்வலர்கள் பாராட்டு

2026, குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பாக செயல்பட்டு காவல்துறை பிரிவில் “தகைசால் பணிக்கான விருது” தமிழக காவல்துறை சேர்ந்த 21 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டனுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு காவல்துறை அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
News January 25, 2026
திருச்சி: 12th போதும்..அரசு வேலை!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,900
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பிக்க:<
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


