News September 28, 2025
தர்மபுரி: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

தர்மபுரி மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. SHARE பண்ணுங்க.
Similar News
News January 24, 2026
தருமபுரி பெற்றோர் கவனத்திற்கு!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். மறக்காம ஷேர் பண்ணுங்க
News January 24, 2026
தருமபுரி: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்
News January 24, 2026
தருமபுரியில் தொழிலாளா் துறையினா் அதிரடி!

தருமபுரியில் துணிக்கடையில் பணியாற்றிய குழந்தை தொழிலாளரை தொழிலாளா் துறையினா் நேற்று மீட்டனா். மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் ப. ராஜசேகரன் ஆலோசனையின் பேரில், தருமபுரி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டனா். இதில் 17 வயது சிறுமி துணிக்கடையொன்றில் பணிக்கு அமா்த்தியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தொழிலாளா் துறை குழுவினா் அவரை மீட்டனா்.


