News September 28, 2025
கடலூர் அருகே 21 பேர் மீது வழக்கு

கடலூர் அருகே சாத்தங்குப்பத்தில் நேற்று காலை பழைய நிழற்குடை இடிக்கப்பட்ட இடத்தில் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News January 13, 2026
கடலூர்: 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், ஆனத்தூரை சேர்ந்த மணிகண்டன் மகன் சிவவிஷ்ணு (13), கடலூரில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கியிருந்து, தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் அனைத்து பாடங்களிலும் பெயில் ஆனதால் மனமுடைந்த சிவவிஷ்ணு நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News January 13, 2026
கடலூர்: மனைவி கண் முன்னே கார் மோதி பலி

காட்டுமன்னார்கோவில் அடுத்த திருச்சின்னபுரத்தை சேர்ந்தவர் உதயச்சந்திரன் (48). ஓ.என்.ஜி.சி. நிறுவன தொழிலாளியான இவர் தனது மனைவி பழனியம்மாளுடன்(38) பைக்கில் வீராணம் ஏரிக்கரை வழியாக சென்றபோது எதிரே வந்த கார் மோதி படுகாயம் அடைந்த உதயசந்திரன் நேற்று உயிரிழந்தார். படுகாயமடைந்த பழனியம்மாள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து புத்தூர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
News January 13, 2026
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(ஜன.12) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.13) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


