News September 28, 2025

அந்த இடத்தை ஏன் தேர்ந்தெடுத்தீங்க: பிரேமலதா

image

தவெக பிரசாரத்துக்கு குறுகலான சாலையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த இடம், அந்த கூட்டத்திற்கு பத்தாது என கூறிய அவர், இக்கூட்டம் ஒரு தவறான உதாரணம். இனி இதுபோல நடக்கக்கூடாது என வலியுறுத்தினார். மேலும், இந்த விஷயத்தில் அரசியல் பேசுவதை விட, பாதிக்கப்பட்டவர்களுக்காக களத்தில் நிற்க வேண்டும் எனவும் தானும் கரூருக்கு செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News January 16, 2026

டூரிஸ்ட் பேமிலி, பைசனுக்கு சர்வதேச அங்கீகாரம்!

image

சர்வதேச திரைப்பட விமர்சன தளமான ‘லெட்டர்பாக்ஸ்ட்’, ஆண்டுதோறும் உலக அளவிலான சிறந்த படங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2025-ம் ஆண்டுக்கான டாப் 10 ஆக்‌ஷன் படங்களின் வரிசையில் 5-வது இடத்தில் ‘பைசன்’ படமும், டாப் 10 காமெடி படங்களின் பட்டியலில் 6-வது இடத்தில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படமும் இடம்பெற்றுள்ளது. சர்வதேச அளவில் தமிழ் சினிமா கவனிக்கப்படுவதற்கான அங்கீகாரமாக இது அமைந்துள்ளது.

News January 16, 2026

இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

image

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்திற்குத் தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <>படிவத்தைக் கிளிக்<<>> செய்யுங்கள். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 16, 2026

ஈரானில் 12,000 பேர் பலி.. நாடே சோகத்தில் ஆழ்ந்தது!

image

ஈரானில் நடைபெற்ற போராட்டங்களில் 12,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மனதை உலுக்கும் வகையில் நூற்றுக்கணக்கான பிணங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ள போட்டோக்கள் வெளியாகி, பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உடல்களை வாங்க வேண்டும் அல்லது வெகுஜன புதைகுழியில் புதைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!