News September 28, 2025
கரூர் கருப்பூர் ஆகிவிட்டது: வைரமுத்து

தாங்க முடியவில்லை, இரவு என்னால் தூங்க முடியவில்லை. மரணத்தின் படையெடுப்பால் கரூர் கருப்பூர் ஆகிவிட்டது என்று கவிஞர் வைரமுத்து உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். ஒவ்வோர் உயிருக்கும் என் அஞ்சலி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் இரங்கல் எனக் கூறிய அவர், இனி இப்படி நிகழாமல் பார்த்துக் கொள்வதே நீண்ட துயரத்துக்கு நிவாரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 28, 2025
கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ₹11 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் அனைத்து கர்ப்பிணிகளுக்கும், கருவுற்றது முதல் குழந்தை பிறந்தது வரை என 3 தவணைகளில் பணம் வழங்கப்படும். இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க https://pmmvy.wcd.gov.in இணையதளத்தை பார்வையிடுங்கள். இந்த முக்கிய திட்டத்தை அனைவரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.
News September 28, 2025
காவல்துறை பொறுப்பு ஏற்க வேண்டும்: அன்புமணி

கரூர் பெருந்துயருக்கு காவல்துறையின் இன்டலிஜென்ஸ் பிரிவு பொறுப்பு ஏற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். அரசியல் நிகழ்வுகளில் பாரபட்சம் பார்க்காமல், சரியான இடங்களை அரசு ஒதுக்க வேண்டும் என தெரிவித்த அவர், தனிநபர் கமிஷன் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மக்களும் அரசியல் நிகழ்வுகளில் குழந்தைகளை கூட்டிவருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
News September 28, 2025
CBI விசாரணை நடத்த வேண்டும்: OPS

கரூர் துயர சம்பவத்தை CBI விசாரிக்க வேண்டும் என OPS வலியுறுத்தியுள்ளார். இறந்தவர்களின் குடும்ப சூழ்நிலையை பொறுத்து நிதியுதவியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அவர்களுக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு வரைமுறைகளை முறைப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.