News September 28, 2025

தேனியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

image

வருஷநாடு கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி தனது 9 வயது பேத்தியுடன் நேற்று முன்தினம் மூல வைகை ஆற்றங்கரையில் மாடு மேய்க்க சென்றுள்ளார். சிறுமியை ஆற்றின் ஒரு கரையில் உட்கார செய்து விட்டு மறு கரையில் மாட்டை கட்டி வைக்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த லோகேந்திரன் (50) என்பவர் தனியாக இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வருஷநாடு போலீசார் லோகேந்திரனை போக்சோவில் கைது (செப்.27) செய்தனர்.

Similar News

News February 10, 2026

பணி நியமன புகாரில் டி.இ.ஓ ஆஜராக உத்தரவு

image

தேனி சி.இ.ஓ அலுவலகத்தில் இன்று (பிப்.10) தேனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் நாகலட்சுமி அவரது நிர்வாக வரம்பில் உள்ள பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட பணி நியமனங்கள் பற்றி நேரடி விசாரணை நடைபெற உள்ளது. விசாரணையில் நாகலட்சுமி, நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் ஆஜராக வேண்டும். டி.இ.ஓ. வாக பொறுப்பேற்ற 2024 அக்.10க்கு பின் கையாளப்பட்ட பணிநியமன கோப்புகளை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

News February 10, 2026

பைக் விபத்தில் காவலாளி படுகாயம்

image

தேவதானப்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (59). இவர் தனியார் சர்க்கரை ஆலையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரக்கூடிய நிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பியுள்ளார். அப்போது ஜெயமங்கலம் ஆற்றுப்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி பைக் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பிரகாஷ் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து ஜெயமங்கலம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு.

News February 10, 2026

தேனி: மாட்டு பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <>கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!