News September 28, 2025
முதலமைச்சரின் ராமநாதபுரம் பயணம் திடீர் ரத்து

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நாளை (செப்.29, திங்கள்), செப்.30 (செவ்வாய்) ஆகிய இரண்டு நாள்கள் ராமநாதபுரத்தில் கள ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க இருந்தார். இந்நிலையில் கரூர் துயரச் சம்பவம் எதிரொலியாக செப்.29, 30ல் நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News January 17, 2026
பரமக்குடி: மணி மண்டபத்தை திறந்து வைத்த முதல்வர்

பரமக்குடியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சுதந்திர போராட்ட தியாகி இமானுவேல் சேகரனாரின் மணி மண்டபத்தை இன்று (ஜன.17) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உடன் அமைச்சர்கள் நேரு, ராமச்சந்திரன், சாமிநாதன் ராஜ கண்ணப்பன், கயல்விழி செல்வராஜ், கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், எம்எல்ஏக்கள் காதர் பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், தமிழரசி, ராஜா இருந்தனர்.
News January 17, 2026
ராமநாதபுரம்: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.ராமநாதபுரம்- 9445000363
2.ராமேஸ்வரம்- 9445000364
3.திருவாடானை- 9445000365
4.பரமக்குடி- 9445000366
5.முதுகுளத்தூர்- 9445000367
6.கடலாடி- 9445000368
7.கமுதி- 9445000369
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News January 17, 2026
ராம்நாடு: டிகிரி போதும்., கிராம வங்கியில் வேலை ரெடி!

ராம்நாடு மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <


