News September 28, 2025
வேலூரில் பாலியல் தொழில் ; பெண்கள் மீட்பு!

விருப்பாட்சிபுரம் குளத்துமேட்டு பகுதியில் விபசாரம் நடப்பதாக பாகாயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று அங்கு சென்று ஒரு வீட்டில் சோதனை செய்தபோது மேற்கு வங்காளத்தை சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக அதேபகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரி (41), சரளா (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News January 13, 2026
வேலூரில் டாஸ்மாக் கடைகள் இயங்காது!

வேலூர் மாவட்டத்தில் வரும் (ஜனவரி 16) திருவள்ளுவர் தினத்தையொட்டி அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் ஓட்டல்களில் உள்ள மதுபான பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். அதையும் மீறி விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார் வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News January 13, 2026
வேலூர்: தூக்குப்போட்டு துடிதுடித்து தற்கொலை!

வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் சதீஷ், ஆட்டோ டிரைவர். பல காரணங்களுக்காக வெளியில் கடன் வாங்கியதாக தெரிகிறது. கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News January 13, 2026
வேலூர்: ஆன்லைனில் பணம் அனுப்புபவரா நீங்கள்?

தற்போது பலரும் UPI மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலைப்பட வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையேல், Google Pay (18004190157), PhonePe (8068727374), Paytm (01204456456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தை ஈஸியாக திரும்பப் பெறலாம். ஷேர் பண்ணுங்க!


