News September 28, 2025
திருவாரூர்: பேருந்து பயணிகள் கவனத்திற்கு!

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க
Similar News
News February 4, 2026
திருவாரூர் கலெக்டரின் முக்கிய அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை பணியில் அமர்த்தும் தனியார் நிறுவனங்களுக்கு மானிய தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணியமர்த்தப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2000 வீதம் வருடத்திற்கு ரூ.24,000 ஊதிய மானியமாக வழங்கப்படும் எனவும் https://forms.gle/kpThjwGTCKVGiyfw என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 4, 2026
திருவாரூர்: சடலமாக கிடந்த சமையல் தொழிலாளி

திருத்துறைப்பூண்டி அடுத்த கீராந்தி வடிகால் வாய்க்கால் அருகே ஆண் சடலம் ஒன்று ரத்தக்காயங்களுடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. விரைந்து சென்ற கோட்டூர், ஆலிவலம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் சடலமாக கிடந்தவர் பொன்னிறையைச் சேர்ந்த சமையல் தொழிலாளியான சுப்ரமணியன் (45) என்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து இச்சம்பவம் விபத்தா? அல்லது கொலையா? என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 4, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.3) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.4) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


