News September 28, 2025
கிருஷ்ணகிரி மக்களே! இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

கிருஷ்ணகிரி மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா? தமிழக அரசு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தையல் இயந்திரம் வழங்கி வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க எந்த ஒரு கல்வி தகுதியும் இல்லை. விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். நல் உள்ளம் கொண்ட கிருஷ்ணகிரி மக்களே இதனை SHARE பண்ணுங்க
Similar News
News January 26, 2026
கிருஷ்ணகிரியில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

கிருஷணகிரிக்குட்பட்ட மின் நிலையங்களில் நாளை (ஜன.27) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி சிகரலபள்ளி, குண்டியால்நத்தம், கப்பல்வாடி, சி.கே.பட்டி, வெங்கடச முத்திரம், தொகரப்பள்ளி, பில்லக்கொட்டாய், ஆடாலம், ஜெகதேவி, சத்தலட் பள்ளி, ஜி.என்.மங்கலம், கொல்லப்பட்டி, சிப்காட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை செய்யப்படும்.
News January 26, 2026
கிருஷ்ணகிரியில் தறிகெட்டு ஓடிய கார்; 6 பேர் படுகாயம்!

விசாகப்பட்டினத்தை சேர்ந்த பிரதீபா (24) என்பவர் விஜயவாடாவை சேர்ந்த அபிஷேக்குடன் ( 23) காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஊத்தங்கரை அருகே சாலையின் குறுக்கே நாய் வந்ததால் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி அருகே இருந்த இறைச்சி கடையில் போய் சொருகியது. இதில் இறைச்சி வாங்க வந்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 26, 2026
கிருஷ்ணகிரியில் அடித்தே கொலை!

கோனேகானப்பள்ளியை சேர்ந்த மாற்றுத்திறனாளி முனிமாரப்பா (41). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த முனிகிருஷ்ணப்பாவுக்கும் இடையே வழிபாதை தொடர்பாக தகராறு இருந்தது. இதில் ஆத்திரமடைந்த முனிகிருஷ்ணப்பா கடந்த 21-ந் தேதி முனிமாரப்பாவை கட்டையால் அடித்து கொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓசூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முனிகிருஷ்ணப்பாவை கைது செய்தனர்.


