News September 28, 2025
கரூர் துயரத்தில் மரணித்த இளம்ஜோடி

கரூர் துயரத்தில் திருமணம் செய்யவிருந்த இளம் ஜோடி பூக்காமல் செடியிலேயே மரணத்திருக்கிறது. கோகுலஸ்ரீ – ஆகாஷுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்தது. இருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடத்த நிலையில், வருங்கால மனைவியுடன் விஜய்யை பார்த்துட்டு வரேன்னு சொல்லிவிட்டு ஆகாஷ் கரூர் சென்று இருக்கிறார். பொண்ணு மாப்பிள்ளையாக ஜோடியாக சென்றவர்கள் திரும்பி வரவில்லை.
Similar News
News September 28, 2025
தவெகவின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி

கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் மதுரைக் கிளையில் விசாரணைக்கு எடுக்க நீதிபதி எம்.தண்டபாணி ஒப்புதல் வழங்கியுள்ளார். தவெக சார்பாக வழக்கறிஞர் அறிவழகன், நிர்மல் குமார் முறையிட்ட நிலையில் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வில் நாளை (செப்.29) பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணை நடைபெறவுள்ளது. விசாரணையின் போது முக்கிய சிசிடிவி ஆதாரங்கள் சமர்பிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
News September 28, 2025
கரூரில் சீமானை முற்றுகையிட்ட குடும்பத்தினர்

கரூரில் தவெக பிரசார கூட்டத்தில் சிக்கி காயமடைந்தவர்களை நலம் விசாரிக்க கரூர் அரசு ஹாஸ்பிடலுக்கு சீமான் சென்றார். இதனையடுத்து, பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடல்களை காண முற்பட்ட சீமானை, பலியானோரின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். தங்களை பிணவறையினுள் செல்ல அனுமதிக்கவில்லை எனவும், உடல்களை விரைவில் ஒப்படைக்க மறுக்கிறார்கள் என்றும் சீமானிடம் கூறி முறையிட்டுள்ளனர்.
News September 28, 2025
கரூர் சம்பவத்தால் தாங்க முடியாத துயரம்: கார்த்தி

கரூரிலிருந்து வந்த செய்தி தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் காயமடைந்தோர் விரைவில் நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன் எனவும் X-ல் அவர் பதிவிட்டுள்ளார். இனி ஒருபோதும் இவ்வாறு நடைபெறாமல் இருக்க அனைவரும் ஒத்துழைப்போம் என்று கார்த்தி கூறியுள்ளார்.