News April 14, 2024
வள்ளலாரின் பொன்மொழிகள்

✍மனதை அடக்க நினைத்தால் அடங்காது; அதை அறிய நினைத்தால் அடங்கும். ✍தவறு செய்வதும் மனம் தான்; இனி தவறு செய்யக் கூடாது என்று தீர்மானிப்பதும் மனம் தான். ✍அன்பும் இரக்கமும் வாழ்க்கையின் அடிப்படை. ✍உண்மையைச் சொல்! அது உனது மரியாதையை பாதுகாக்கும். ✍உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள். ✍சோதனைகள் தான் ஒரு மனிதனுக்கு அவனை அறிமுகப்படுத்துகின்றன.
Similar News
News September 18, 2025
வாக்கு திருட்டுக்கு ECI உடந்தை: ராகுல் காந்தி

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து கர்நாடகாவில் உள்ள வாக்குகளை நீக்க விண்ணப்பித்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,018 வாக்காளர்கள் பெயரை நீக்கும்படி சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு தெரியாமலேயே சிலர் விண்ணப்பித்துள்ளதாக கூறியுள்ளார். வாக்குத் திருட்டில் ஈடுபடுவோரை தேர்தல் ஆணையம் பாதுகாப்பதாகவும் ராகுல் குற்றம்சாட்டினார்.
News September 18, 2025
விஜய்யின் கொள்கை என்ன? H.ராஜா

கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்ற அரசியல் நிலைப்பாட்டை கொண்டு விஜய் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், பா.ஜ.கவை கொள்கை எதிரி என்று விமர்சிக்கும் விஜய்யின் கொள்கை என்ன என H.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இதுவரை தனது கொள்கைகளை பற்றி விஜய் பேசவில்லை என சாடிய அவர், தேசிய கட்சியான பாஜகவை எதிர்க்கும் தவெக தேச விரோத கட்சியா என்றும் கேட்டுள்ளார்.
News September 18, 2025
மருத்துவமனையில் காமெடி நடிகர்.. உதவி செய்த இபிஎஸ்

பிரபல காமெடி நடிகர் குண்டு கல்யாணம் கிட்னி பிரச்சனையால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் சிகிச்சைக்கு பண உதவி தேவை என செய்தி வெளியானது. இந்நிலையில், அவரின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்கும் என்று EPS தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தொண்டரான இவர் தேர்தல் காலங்களில் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருப்பவர் என்பது குறிப்பிடத்தகக்து.