News April 14, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்!

*காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் – ராகுல் காந்தி
*வாக்குகளைப் பெறு; வாக்களித்தோரை மற என்பது காங்கிரஸின் கொள்கை – ஜெ.பி.நட்டா
*இஸ்ரேல் மீதான போர் நடவடிக்கையை ஈரான் தொடங்கியது.
*ஐ.எம்.எஃப் அமைப்பின் நிர்வாக இயக்குநராக கிறிஸ்டலினா ஜார்ஜிவா மீண்டும் தேர்வு.
*ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்பில் ராதிகா வெள்ளிப்பதக்கம் வென்றார்.
Similar News
News November 14, 2025
தேஜஸ்வி யாதவ் மீண்டும் முன்னிலை

3-வது சுற்று முடிவில் <<18283085>>1,273 வாக்குகள்<<>> பின்னடைவில் இருந்த தேஜஸ்வி யாதவ், 6-வது சுற்று முடிவில் 219 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். BJP-யின் சதிஷ் குமார் 23,312 வாக்குகள் பெற்றுள்ளார். குறைவான வாக்கு வித்தியாசமே உள்ளதால், இந்த ரகோபூர் தொகுதி முடிவில் நீண்ட இழுபறி உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 14, 2025
தவெக கூட்டணியை விரும்புகின்றனரா காங்கிரசார்?

தவெக உடன் கூட்டணி அமைப்பது குறித்து காங்., மாவட்ட நிர்வாகிகளிடையே ரகசிய சர்வே நடத்தப்பட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அதில், திமுக 40 தொகுதிகளை தரவில்லை எனில், தவெக உடன் கூட்டணி அமைக்கலாம் என கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம். ஏற்கெனவே, டெண்டர் கிடைப்பதில்லை, திமுகவால் காங்.,கிற்கு வளர்ச்சி இல்லை என பல அதிருப்திகள் நிலவுகிறது. இது தொடர்பாக காங்., தேசிய தலைமை ஆலோசனை நடத்திவருகிறதாம்.
News November 14, 2025
தேர்தல் முடிவு.. அரசியலில் இருந்து விலகலா?

நிதிஷ்குமாரின் JD(U) கட்சி 25 இடங்களுக்கு மேல் வென்றால், தான் அரசியலில் இருந்து விலகிவிடுவதாக பிரசாந்த் கிஷோர் சவால் விட்டிருந்தார். தற்போதைய நிலவரப்படி JD(U) 76 இடங்களில் முன்னிலையில் உள்ளது. எனவே, பிரசாந்த் கிஷோர் உடனடியாக அரசியலில் இருந்து விலக வேண்டும் என்று JD(U) கட்சியினர் கூறி வருகின்றனர். அதேநேரம், அவரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


