News September 28, 2025
பெற்றோர்கள் கொஞ்சம் சிந்தித்திருந்தால்..

உலகம் அறியாத குழந்தைகளை கூட்டத்திற்கு அழைத்து சென்று, பறிகொடுத்து கதறி அழும் பெற்றோர்கள் ஒரு கணம் யோசித்திருந்தால், பெரும் துயரம் தவிர்க்கப்பட்டிருக்குமே. குழந்தைகளை அழைத்துவர வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டும், அதை பொருட்படுத்தவில்லை. ஒன்றரை வயது பச்சிளம் குழந்தையையும் தூக்கி சென்றுள்ளனர். கதறி அழும் நேரத்தில் இன்று மற்றவர்கள் ஆறுதல் கூறினாலும், வலி பெற்றோர்களுடையது தானே!
<<-se>>#karurstampede<<>>
Similar News
News January 13, 2026
புது சட்டம் அமலுக்கு வரும் முன்பே விலை உயர்வு!

புதிய கலால் திருத்த மசோதா வரும் பிப்.1-ல் அமலுக்கு வர உள்ளது. அதன்படி, <<18461895>>சிகரெட்<<>> உள்ளிட்ட புகையிலை பொருள்களுக்கான வரி பல மடங்கு உயர்த்தப்பட உள்ளது. ஆனால், இந்த சட்டம் அமலுக்கு வரும் முன்பே பல்வேறு பகுதிகளில் சிகரெட்டுகளின் விலை அதிகரித்துள்ளது. மொத்த வியாபாரிகள் பதுக்க தொடங்கி, குறைந்த அளவில் மட்டுமே விற்பனைக்கு அனுப்பவதால், அனைத்து வகையான புகையிலை பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
News January 13, 2026
அமித்ஷாவை சந்தித்தாரா விஜய்?

CBI விசாரணைக்காக டெல்லி சென்றுள்ள விஜய், அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இரவில் சந்திக்க இருந்ததாக தகவல் வெளியானது. இதனால், NDA கூட்டணியில் தவெக இணைவது உறுதியானதாக பலர் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் அப்படிப்பட்ட சந்திப்பே நடக்கவில்லை என தவெக தரப்பு உறுதியாக மறுத்துள்ளது. விசாரணை முடிந்து அறைக்கு வந்த விஜய், உடனே சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்க சென்றதாக கூறப்படுகிறது.
News January 13, 2026
ஈரான் மீதான தாக்குதலுக்கு தயாரானாரா டிரம்ப்?

ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்த டிரம்ப் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இருப்பினும் பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்தே இருப்பதாகவும், தெருக்களில் மக்களை கொல்வதை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. <<18836892>>ஈரானில்<<>> அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவும், இஸ்ரேலும் போராட்டக்காரர்களை தூண்டிவிடுவதாக அந்நாட்டு அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.


