News September 28, 2025
செங்கல்பட்டு: TNSTC சூப்பர் அறிவிப்பு..உனனே APPLY பண்ணுங்க

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை,விழுப்புரம் போன்ற 6 மண்டலங்களில் 1,588 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் பட்டதாரிகள் (மாதம் ரூ.9,000) & டிப்ளமோவுக்கு (மாதம் ரூ.8,000) உதவித்தொகை வழங்கப்படும். கலை, அறிவியல், வணிகப் பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். <
Similar News
News January 17, 2026
தாம்பரம் அருகே கொடூர கொலை!

திரிசூலம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ரீனாவும் திருமணம் மீறிய உறவில் இருந்துள்ளனர். மேலும் ரீனாவின் தோழி ரஜிதா என்பவரிடம் செல்வகுமார் பழகியுள்ளார். இந்நிலையில் ரீனா (ம) ரஜிதா வேறொரு ஆண் நண்பருடன் பழகி வந்துள்ளனர். இதனை தட்டிக் கேட்ட செல்வகுமாரை 17 வயது சிறுவனுடன் சேர்ந்து இருவரும் கொடூர முறையில் கொலை செய்தனர். இது தொடர்பாக நேற்று 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
News January 17, 2026
செங்கை: இளம்பெண்ணை ஏமாற்றிய மருத்துவர்!

தாம்பரம், நெடுங்குன்றத்தைச் சேர்ந்த மருத்துவர் ராம்கி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது. இந்த நிலையில், தனக்கு திருமணமானதை மறைத்து, உடன் வேலை செய்யும் சக மருத்துவரை காதலிப்பதாகக் கூறி அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளம்பெண் அளித்த புகாரின் பேரில், ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்கியைச் சிறையில் அடைத்தனர்.
News January 17, 2026
செங்கல்பட்டு இரவு பணி செய்யும் காவலர் விவரம்

செங்கல்பட்டு (ஜனவரி-16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


