News September 28, 2025
புதுவை: பணம் இல்லாததால் தாய் தற்கொலை

புதுவை மடுகரை, பாலமுருகன், இவரது மனைவி மகேஸ்வரி, இவர்களின் மகள் அனுஸ்ரீக்கு வரும் 5ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக பாலமுருகன் & மகேஸ்வரி, பல இடங்களில் கடனாக பணம் கேட்டுள்ளனர். எங்கும் கடன் கிடைக்காதால் மனமுடைந்த மகேஸ்வரி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின்பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 20, 2026
புதுவை: முதல்வர் மீது பாஜக அமைச்சர் கடும் அதிருப்தி

புதுச்சேரி மாநிலத்தில், பாஜக மற்றும் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், பாஜக-வை சேர்ந்த அமைச்சர் ஜான்குமார் தனக்கு இலாகா ஒதுக்கப்படாதது குறித்து, முதலமைச்சர் ரங்கசாமி மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். எனக்கு இலாகா வழங்கக்கூடாது என்பதில் ஏதோ ஒரு சதி நடக்கிறது என, செய்தியாளர்களிடம் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டார்.
News January 19, 2026
புதுவை: துயரம் நீக்கும் திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர்

புதுவை மாநிலம் காரைக்காலில், சோழர்களால் கட்டப்பட்ட கோயில் தான் இந்த திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் கோயில். இங்கு உற்சவராக வேடமூர்த்தி உள்ளார். இது சோழ நாட்டின் 49-வது சிவத்தலமாகும். சிவனின் மகனான ஐயப்பன் இங்கு இரண்டு மனைவிகளுடன் காட்சி தருகிறார். இங்குள்ள முருகனும், சிவனும் கையில் வில்லுடன் காட்சி தருகின்றனர் அதுவே இக்கோயிலின் சிறப்பாகும். இங்கு வழிபட்டால் துயரம் யாவும் நீங்கும் என்பது ஐதிகம்.
News January 19, 2026
புதுவை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!


