News September 28, 2025

என்று தனியும் இந்த சினிமா மோகம்? இயக்குநர் அமீர்

image

கரூரின் மரண ஓலத்தை சுட்டிக்காட்டி, உங்கள் அரசியல் விளையாட்டுக்கு அப்பாவி குழுந்தைகள் பலியா என இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார். எத்தனை உயிர்களை காவு வாங்கி ஆட்சியில் அமர்வீர்கள் என கேட்ட அவர், என்று தனியும் இந்த சினிமா மோகம் எனவும் வேதனைப்பட்டுள்ளார். கரூரில் உயிரிழந்தவர்களின் ஆன்மா அமைதி பெற இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 28, 2025

சற்றுமுன்: நீதிபதி இல்லத்திற்கே சென்ற தவெகவினர்

image

சென்னையில் உள்ள நீதிபதி தண்டபாணி இல்லத்துக்கு தவெக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அறிவழகன், CTR நிர்மல்குமார் சென்றுள்ளார். கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் எனவும், CCTV ஆதாரங்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் எனவும் முறையீடு செய்துள்ளனர். இதனை நீதிபதி ஏற்கும் பட்சத்தில் நாளை அல்லது நாளை மறுநாள் அவசர வழக்காக விசாரணைக்கு வரலாம் என கூறப்படுகிறது.

News September 28, 2025

TVK விவகாரத்தை விசாரிக்கும் அருணா ஜெகதீசன் யார்?

image

➤2017 – Ex CM ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆணையத்தில் அங்கம் வகித்தவர் ➤2018 – ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த விசாரணை ஆணையத்தை தலைமையேற்றவர் ➤2025- கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். இதனை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

News September 28, 2025

கரூர் துயரம்: நிதியுதவி அறிவித்தார் PM மோடி

image

கரூர் துயரத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு PM மோடி தலா ₹2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். காயம் அடைந்தோருக்கு ₹50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விஜய் ₹20 லட்சம், தமிழக அரசு ₹10 லட்சம் அறிவித்துள்ள நிலையில் தற்போது PM-ன் ₹2 லட்சம் சேர்த்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹32 லட்சம் நிதியுதவி கிடைக்கும்.

error: Content is protected !!