News September 28, 2025

மயிலாடுதுறை: வங்கிக் கணக்கிலிருந்து திருடப்பட்ட பணம்

image

மயிலாடுதுறை கூறைநாட்டை சேர்ந்த ஸ்ரீசைலன்(78) என்பவரை மர்ம நபர் வங்கி மேலாளர் என கூறி கைபேசியில் தொடர்பு கொண்டு ஸ்ரீசைலன் மற்றும் அவரது மனைவியின் ஏ.டி.எம் எண் மற்றும் ஓடிபி எண்ணை கேட்டுள்ளார். விபரங்களை கூறியவுடன் ஸ்ரீசைலன் வங்கி கணக்கில் இருந்த ரூ. 8212, அவரது மனைவி கணக்கில் இருந்த ரூ.54,079 பணம் திருடு போனது அதிர்ச்சி அடைந்த ஸ்ரீசைலன் நேற்று பணத்தை மீட்டு தர வேண்டி எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்

Similar News

News January 14, 2026

மயிலாடுதுறையில் கலைவிழா நாளை தொடக்கம்

image

மயிலாடுதுறையில் தஞ்சை மண்டல கலைப்பண்பாட்டுத் துறை சாா்பில் பொங்கல் பண்டிகையையொட்டி, வியாழக்கிழமை (ஜன.15) கலைவிழா தொடங்குகிறது என தஞ்சை மண்டல கலைப் பண்பாட்டு மைய உதவி இயக்குநா் ம. ராஜாராமன் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் ஜன.15, 16 ஆகிய தேதிகளில் மாலை 5 முதல் இரவு 9 மணிவரை நடைபெறுகிறது.

News January 14, 2026

மயிலாடுதுறை: வேதனையின் உச்சத்தில் விவசாயிகள்

image

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்காக மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முழுவதுமாக சாய்ந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனையின் உச்சத்தில் உள்ளனர்.

News January 14, 2026

மயிலாடுதுறை: 1.5 கிலோ தங்கம் திருடிய சிறுவன் கைது

image

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் சுஹாஷ் (48) என்பவா் தங்க நகைகளை உருக்கும் பட்டறை நடத்தி வருகிறாா். இவரது கடையில் பணியாற்றிய மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த 16 வயது சிறுவன் 1.5 கிலோ நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவானாா். இதையடுத்து புகாரின் பேரில் தீவிர விசராணை மேற்கொண்ட போலீசார், தங்க நகைகளை திருடிச் சென்ற சிறுவனை வெறும் மூன்றே மணி நேரத்தில் மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே கைது செய்தனர்.

error: Content is protected !!