News September 28, 2025

உயிரிழந்த மகனுக்கு தாய் கடைசி முத்தம்.. கண்ணீர் PHOTO

image

கரூர் துயரத்தில் இறந்த தனது மகனை கட்டிப்பிடித்து கடைசியாக தாய் முத்தமிட்ட காட்சி பார்ப்பவர்களை சொல்லமுடியாத துயரத்தில் ஆழ்த்தியது. பிள்ளையை பறிகொடுத்துவிட்டு, நெஞ்சில் அடித்துக் கொண்டு தவிக்கும் அந்த ஏழை தாய்க்கு எப்படி ஆறுதல் சொல்வது, யார் ஆறுதல் சொல்வது. கொள்ளி வைக்க வேண்டிய பிள்ளைக்கு, ஒரு தாய் கொள்ளிவைப்பது போன்ற பெரும் துயரம் யாருக்கும் வரக்கூடாது. இதுபோன்ற சம்பவம் இனி நிகழவும் கூடாது.

Similar News

News September 28, 2025

கரூர் துயரம்: நிதியுதவி அறிவித்தார் PM மோடி

image

கரூர் துயரத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு PM மோடி தலா ₹2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். காயம் அடைந்தோருக்கு ₹50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விஜய் ₹20 லட்சம், தமிழக அரசு ₹10 லட்சம் அறிவித்துள்ள நிலையில் தற்போது PM-ன் ₹2 லட்சம் சேர்த்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹32 லட்சம் நிதியுதவி கிடைக்கும்.

News September 28, 2025

கண்களும் மனசும் கலங்கி தவிக்கிறேன்: விஜய்

image

கரூர் துயரத்தினால் கண்களும் மனசும் கலங்கி தவிக்கிறேன் என விஜய் வேதனை தெரிவித்துள்ளார். தன் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை என்றும் சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் X-ல் அவர் பதிவிட்டுள்ளார். இந்த விஷயத்தில் தவெக அனைத்து உதவிகளையும் செய்யும் என குறிப்பிட்டுள்ள அவர், இறைவன் அருளால் இத்துயரத்தில் இருந்து மீண்டும் வர முயற்சிப்போம் என்று கூறியுள்ளார்.

News September 28, 2025

கரூர் துயரம்: அரசிடம் அறிக்கை கேட்ட கவர்னர்

image

கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் கவர்னர் ரவி அறிக்கை கேட்டுள்ளார். விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பரப்புரைக்கு விஜய் தாமதமாக வரக் காரணம் என்ன? கூட்டநெரிசல் எதனால் ஏற்பட்டது? பாதுகாப்பு ஏற்பாடுகள், உயிரிழந்தோர் மற்றும் சிகிச்சை பெறுவோர் விவரம் குறித்து கவர்னர் ரவி விரிவான அறிக்கை கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!