News September 28, 2025

திருச்சி: மது குடிக்க பணம் தராததால் தற்கொலை

image

குழுமணி அகரஹாரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (44). இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுகுடிக்க தன் மனைவியிடம் செல்வராஜ் பணம் கேட்டுள்ளார். இதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்ததால் மனம் உடைந்த அவர், வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 5, 2026

திருச்சி: 10th போதும்.. அரசு வேலை!

image

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project scientist, Project Associate உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 22
3. சம்பளம்: ரூ.12,000 – ரூ.1,00,000/-
4. கல்வித் தகுதி: 10th / 12th / Diploma / B.E / BTech / M.E / M.Tech
5. கடைசி தேதி: 10.01.2026
6. மேலும் தகவலுக்கு:<> CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 5, 2026

திருச்சி விசிக மாவட்டச் செயலாளர்கள் அறிவிப்பு

image

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மாவட்டச் செயலாளர்களை அறிவித்துள்ளார். மண்ணச்சநல்லூர் – ஏகலைவன் சீனிவாசன், லால்குடி – மரியகமல், மணப்பாறை – சக்தி ஆற்றலரசு, ஸ்ரீரங்கம் – சதீஷ், திருவெறும்பூர் – திலீபன் ரமேஷ், முசிறி – கலைச்செல்வன், துறையூர் – துரை சங்கர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

News January 5, 2026

திருச்சி: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு!

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!