News September 28, 2025
நாமக்கல்: விபத்தில் ஏற்பட்ட பெரும் சோகம்

வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள பொம்மம்பட்டி அள்ளாளபுரத்தை சேர்ந்தவர் குப்புசாமி (70). விவசாயி. இவர் மொபட்டில் எரையம்பட்டி-வேலகவுண்டம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் படுகாயம் அடைந்த குப்புசாமியை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News November 1, 2025
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் விளையாட்டு ஆணையம் நாமக்கல் மாவட்ட பிரிவின் மூலம் யோகா பயிற்சியாளர் தேர்வானது வரும் 03.11.2025 மாலை 4 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள விளையாட்டு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தகுதிவாய்ந்த யோகா பயிற்சியாளர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேரில் வருமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 74017-03492 தொடர்பு கொள்ளலாம்.
News November 1, 2025
நாமக்கல் மாவட்டத்திற்கு புதிய வருவாய் அலுவலர்!

நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த சுமன் அவர்கள் வேறு மாவட்டத்திற்கு பணி மாறுதலாகி சென்று விட்ட நிலையில், நாமக்கல் மாவட்ட புதிய வருவாய் அலுவலராக இன்று 31.10.2025 பொறுப்பேற்றுக் கொண்ட சரவணன் அவர்களை வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
News November 1, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.31 நாமக்கல்-(தங்கராஜ் – 9498170895) ,வேலூர் -(சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் -(கோவிந்தசாமி – 9498169110), திம்மநாயக்கன்பட்டி -( ரவி – 9498168665) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.


