News September 28, 2025

திருவாரூர்: குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் தாய் பலி

image

சித்தரையூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகள் சவுமியா (26). கர்ப்பிணியாக இருந்த சவுமியா திருவாரூர் விஜயபுரம் அரசு தாய்-சேய் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று காலை ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தை பிறந்து சிறிது நேரத்திலேயே சவுமியா எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News

News January 2, 2026

திருவாரூர்: பொங்கல் பரிசு… முக்கிய அறிவிப்பு!

image

தமிழக அரசால் ஆண்டுதோறும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அப்படி உங்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தரமில்லாமலோ அல்லது சரியாக வந்து சேரவில்லை என்றால் ‘1800 425 5901’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு அலைச்சல் இல்லாமல் உங்களால் புகாரை அளிக்க முடியும். மேலும் இந்த எண்ணின் மூலமாக ரேஷன் கடை மற்றும் ரேஷன் பொருட்கள் குறித்தும் நீங்கள் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 2, 2026

திருவாரூர் மாவட்ட வரலாறு!

image

தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, 01.01.1997 முதன் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து 9 ஒன்றியங்களும், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 1 ஒன்றியத்தையும் சேர்த்து திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்டு திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் 2 வருவாய்க்கோட்டங்களையும், 9 வருவாய் வட்டங்களையும், 10 ஒன்றியங்களையும், 573 வருவாய்க் கிராமங்களையும் கொண்டுள்ளது. SHARE IT NOW

News January 2, 2026

திருவாரூரில் பெங்களூரு போலீசார் அதிரடி நடவடிக்கை

image

பெங்களூரு ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த பொறியாளர் வினோத்ராம் என்பவர் வீட்டில் கதவை உடைத்து 30 பவுன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற வழக்கில் பெங்களூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், திருவாரூரில் பதுங்கி இருந்த இந்த வழக்கில் தொடர்புடைய புதுச்சேரியைச் சேர்ந்த ரகுராமன் மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோரை நேற்று பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!