News September 28, 2025

நெல்லையில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

image

சீதபற்பநல்லூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல், வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி சிறுக்கன்குறிச்சி சங்கரலிங்கம் என்பவரின் மகன் பேச்சி முத்து(35) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேற்படி நபர் கொலை முயற்சி, கொலை மிரட்டல், திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

Similar News

News February 5, 2026

நெல்லை: உங்க சான்றிதழ் தொலைந்து விட்டதா?

image

நெல்லை மக்களே, பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தாலோ, அல்லது காணாமல் போயிருந்தாலோ அதனை எளிதாக பெறும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. சான்றிதழ்களை பெறும் சிரமங்களை போக்கவும், அலைச்சலை குறைக்கவும், “E-பெட்டகம்” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த <>செயலி<<>> மூலம் உங்கள் சான்றிதழ்களை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News February 5, 2026

மாவட்ட கலெக்டர் முக்கிய அறிக்கை

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள அறிக்கை; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான திறன் மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. தகுதி உள்ள இளைஞர்கள் தாட்கோ இணையதளமான tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மூன்று மாதம் பயிற்சி அளிக்கப்படும். விடுதியில் தங்கி படிக்கும் வசதி, உணவு செலவினம் வழங்கப்படும்.

News February 5, 2026

நெல்லை: டிகிரி போதும்., ரூ.56,100 சம்பளத்தில் சூப்பர் வேலை ரெடி

image

நெல்லை மக்களே, UPSC தேர்வாணயம் நடத்தும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட 933 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 21 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து பிப். 24க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.56,100 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். உயர் பதிவிகளில் பணியாற்ற இந்த நல்ல வாய்ப்பை அனைவருக்கும் SHARE IT.

error: Content is protected !!