News September 28, 2025

திருப்பத்தூரை வழிநடத்தும் பெண் சிங்கங்கள்

image

திருப்பத்தூர் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியராக சிவ சவுந்தரவள்ளி, பெண் எஸ்.பி-யாக ஷ்யாம்ளா தேவி பொறுப்பு வகித்து வருகின்றனர். மேலும், டி.எஸ்.பி, மாவட்ட திட்ட இயக்குநர், சுகாதாரத் துறை இணை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளில் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் திறம்பட பணியாற்றுகின்றனர். இது பெண்களின் முன்னேற்றத்திற்கும், திறமைக்கும் கிடைத்த அங்கீகாரமாகும். ஷேர் பண்ணுங்க.

Similar News

News January 14, 2026

திருப்பத்தூர்: மது போதையில் வாலிபர்கள் அட்டூழியம்!

image

தேவலாபுரம் அடுத்த ஸ்டார் சிட்டி பகுதியில் நேற்று முன்தினம் (ஜன.12) இரவு அஸ்ரத் (22), அம்பேத்கர் நகரை சேர்ந்த நாகப்பன் (21), எல்.மாங்குப்பத்தை சேர்ந்த நிதிஷ் (20) ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் அஸ்ரத்தாய் மற்ற இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

News January 14, 2026

திருப்பத்தூர்: தந்தை கண்முன்னே 3 வயது மகளுக்கு நேர்ந்த சோகம்

image

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த புலவர்பள்ளி, கெஜலூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் நேற்று (ஜன.13) தனது உறவினர் மற்றும் 3 வயது மகள் சன்மதியுடன், ஆலங்காயம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி பைக் சாலையில் விழுந்தது. இதில் குழந்தை சன்மதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்காயம் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

News January 14, 2026

திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (13.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். தாலுக்கா வாரியாக உள்ள காவல்துறை அதிகாரிகளின் தனி தொலைபேசி எண் இங்கே வழங்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பொதுமக்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!