News September 28, 2025

கள்ளக்குறிச்சி: சங்கிலி பறிக்க முயன்ற இளைஞர் கைது

image

கள்ளக்குறிச்சி பகுதியில், ஒரு பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த இளைஞரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில், அவர் தியாகதுருகத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அந்த இளைஞரைக் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News January 19, 2026

சங்கராபுரத்தில் வழுக்கி விழுந்து பலி!

image

கள்ளக்குறிச்சி; சங்கராபுரம் அருகெ உள்ள சவுந்தரவல்லிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி(67). விவசாயியான இவர், சம்பவத்தன்று தனது வீட்டைக் கழுவிக் கொண்டிருந்தார். அப்போது, தரையில் வழுக்கி விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றும், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சங்கராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 18, 2026

கள்ளக்குறிச்சி: திருமண தடையா? இதை பண்ணுங்க!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1800 ஆண்டுகள் பழமையான பரிக்கல் தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலமாகும். இந்தியாவிலேயே இத்தலத்தில் மட்டுமே அனைத்து பிரிவு மக்களாலும் குல தெய்வமாக கொண்டாடப்படுகிறார். மேலும் இந்த கோயில் வந்து தரிசித்தால் திருமண தடை நீங்கி உடனே திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. மேலும் தோஷங்கள் தீரும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 18, 2026

கள்ளக்குறிச்சி: +12, ITI, டிப்ளமோ முடித்தவரா நீங்கள் ?

image

மத்திய அரசின் இந்திய அணுசக்தி நிறுவனத்தில் டெக்னீஷியன், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 114 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12th,டிப்ளமோ, ஐடிஐ படித்த 18-28 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.34,286-ரூ.55,932 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில் <<>>வரும் பிப்.04க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!