News September 28, 2025

பெரம்பலூர்: கஞ்சா வைத்திருந்த நபர் கைது

image

பெரம்பலூர் அருகே, ஆலம்பாடி கிராமத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் இன்று (செப்.27) சிறப்பு ரோந்து மேற்கொண்டனர். அப்போது ஆலம்பாடி கிராமத்தில் செல்வா என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, செல்வாவை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Similar News

News November 10, 2025

பெரம்பலூர்: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

image

பெரம்பலூர் மக்களே சமீப காலமாக மிஞ்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுதல் ,டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிதல், எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழ அரசு மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் 9498794987 என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்க முடியும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 10, 2025

பெரம்பலூர்: இவ்வளவு பழமையான இடங்களா?

image

பெரம்பலூர் மாவட்டம் 12 கோடி ஆண்டுகளுக்குமுன்பு கடலுக்குள் இருந்ததடாக சொல்லப்படுகிறது. அவ்வாறு இருக்க பழமையான இடங்களை நாம் காண்போம்

➡️வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில் – 1100 ஆண்டுகள் பழமை
➡️இரஞ்சன்குடி கோட்டை – 600 ஆண்டுகள் பழமை
➡️கல்மரம் – 120 மில்லியன் ஆண்டுகள் பழமை
➡️பாலதண்டபாணி கோவில் – 800 ஆண்டுகள் பழமை
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து நமது ஊரின் பெருமையை தெரியப்படுத்துங்க…

News November 10, 2025

பெரம்பலூர்: மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவுபடி, பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான விண்ணப்பப் படிவங்கள், வீடு வீடாக வழங்கும் பணிகள் கடந்த 4ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு தீவிர திருத்த பணிகளில் கணக்கெடுப்பு படிவங்களை, வழங்காதவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!