News September 28, 2025
அரியலூர்: ரூ.20.5 லட்சம் நிதியுதவி

மீன்சுருட்டி காவல் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தவர் சதீஷ். இவர் கடந்த ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, இவரது குடும்பத்திற்கு உதவும் நோக்கில், காக்கும் உறவுகள் 2017 என்ற வாட்ஸ் அப் குழு மூலம் மொத்தம் ரூ.20½ லட்சம் நிதி திரட்டப்பட்டது. இதையடுத்து அரியலூர் எஸ்.பி பா.சாஸ்திரி, சதீஷின் குடும்பத்தை நேற்று நேரில் அழைத்து அவர்களுக்கு நிதியை வழங்கினார்.
Similar News
News January 12, 2026
பொங்கல் விழா கொண்டாடிய பாஜகவினர்

அரியலூர் மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் இன்று பொங்கல் விழாவை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஒன்றிய தலைவர் அருண் ஏற்பாட்டில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் பரமேஸ்வரி ஆனந்த்ராஜு, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
News January 12, 2026
அரியலூரில் உள்ள மிகப்பெரிய யானை சுதை சிற்பம்!

அரியலூர் மாவட்டம், சலுப்பை கிராமத்தின் எல்லையில் பழங்கால யானை சுதை சிற்பம் ஒன்று உள்ளது. வெல்லம், கடுக்காய் மற்றும் சுண்ணாம்புக் கலவையால், சுட்ட செங்கற்களை கொண்டு 33 அடி நீளமும், 12 அடி அகலமும், 60 அடி உயரமும் கொண்ட அந்த யானை சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை சிற்பமாக காட்சியளிக்கிறது. இந்த சுதை சிற்பத்தை தமிழக தொல்லியல் துறை புராதன சின்னமாக 2020ஆம் ஆண்டு அறிவித்துள்ளது.
News January 12, 2026
அரியலூர்: EMI-ல் கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

அரியலூர் மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு இங்கு <


