News September 28, 2025
இயற்கை விலங்கு நல ஆர்வலர்களுக்கு விருது

இயற்கை பாதுகாப்பிற்கு மரக்கன்றுகள் நடுதல் மருத்துவ தாவரங்கள் வளர்ப்பதை ஊக்குவித்தல் வனவிலங்குகளை பாதுகாத்தல் இயற்கை சார்ந்த விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளில் தன்னார்வத்துடன் ஈடுபடும் நபர்கள் அடையாளம் கண்டு அங்கீகரிக்கப்பட்டு
மாநில அளவில் 100 நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார் விபரங்களுக்கு 90031 57752 தொடர்பு கொள்ளலா
Similar News
News January 12, 2026
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற 14-ம் தேதி பொதுமக்களை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து குக்கிராமங்களிலும் பெரிய அளவிலான தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அனைத்து ஊராட்சிகளிலும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை கொண்டு கோல போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது என ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
News January 12, 2026
மோகனூரில் வசமாக சிக்கிய வாலிபர்!

நாமக்கல்: மோகார், கணவாய்பட்டி பகுதியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர். ஆட்டோவில், சந்தேகத்திற்கு இடமான வகையில், சாக்கு மூட்டைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து முகமது வாசிம் என்பவரை கைது செய்து 300 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
News January 12, 2026
தங்கப் பதக்கம் வென்ற நாமக்கல் மாணவன்

டெல்லியில் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்த தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் நடைபெற்றது. இதில் சேந்தமங்கலத்தை சேர்ந்த தனுஷ் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றார். தனுஷுக்கு சேந்தமங்கலம் சமூக அமைப்பு சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் நவநீதன் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராஜா சிலம்ப பயிற்சியாளர் மனோஜ் மற்றும் ராஜா ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


