News September 28, 2025
பச்சிமோத்தாசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்!

பச்சிமோத்தாசனம் செய்வதால் உடலில் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும். படபடப்பு, டென்சன் நீங்கி மன அமைதி உண்டாகும். இதனை செய்ய முதலில், கால்களை நேராக நீட்டி உட்காரவும். அடுத்து முன்னோக்கி குனியுங்கள். இரு கால் கட்டை விரல்களையும் கொக்கி போல் பிடித்துக்கொண்டு, நெற்றியால் கால் முட்டிகளை தொட வேண்டும். இதே நிலையில் இருந்துகொண்டு 1-10 வரை எண்ணவும். பின்னர் ரிலாக்ஸ் செய்யவும்.
Similar News
News September 28, 2025
விரும்பியவருக்கு ஓட்டு போடுங்க.. கூட்டம் போடாதீர்கள்’

ஓட்டு போடுங்கள் – விரும்பும் நபர்களுக்கு, ஆனால் வாழ்வை தொலைக்க கூட்டம் போடாதீர்கள் என கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து நடிகர் பார்த்திபன் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது X தள பதிவில், 10 குழந்தைகள் பலியானதை சுட்டிக்காட்டி, இறுதி ஊர்வலத்தில் பிய்த்து எறியப்படும் பிஞ்சு பூக்களாய் குழந்தைகளை பலியாக்காதீர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
<<-se>>#karurstampede<<>>
News September 28, 2025
TN அரசு, போலீஸ் கடமை தவறிவிட்டது: EPS

விஜய்யின் கரூர் பரப்புரையில் TN அரசும், போலீசும் கடமை தவறிவிட்டதாக EPS சாடியுள்ளார். விஜய் பேசி கொண்டிருந்த போது தொடர்ந்து ஆம்புலன்ஸ் சென்றது சந்தேகத்தை கிளப்புகிறது என்றும், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பாதுகாப்பு வழங்கியிருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். தவெக கூட்டம் அறிவிக்கப்பட்ட போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று EPS பேசினார்.
News September 28, 2025
BREAKING: கரூர் செல்கிறாரா விஜய்?

கரூர் துயரத்தில் 39 பேர் உயிரிழந்த நிலையில், கட்சி நிர்வாகிகளுடன் விஜய் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த மீண்டும் கரூருக்கு செல்வது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்குவது குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது. தற்போதுவரை தவெகவினர் யாரும் அஞ்சலி செலுத்தாதது சர்ச்சையான நிலையில், கரூர் செல்வது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது.