News September 28, 2025
திருவள்ளூர்: TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு!

திருவள்ளூர் மாவட்டத்தில், TNPSC சார்பில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு இன்று (செப்.28) நடைபெறுகிறது. தேர்வு எழுத வரும் தேர்வர்கள், காலை 8.30 மணிக்குள் தேர்வுக்கூடத்திற்கு வந்துவிட வேண்டும். ஹால் டிக்கெட் மற்றும் புகைப்பட அடையாள அட்டையுடன் வருவது கட்டாயம். மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை. தேர்வு எழுத கருப்பு நிற மை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேர்வு எழுத செல்வோருக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News January 15, 2026
திருவள்ளுர்: வருங்கால கணவர் கண்முன்னே துடிதுடித்து பலி!

திருவள்ளூர்: செங்குன்றத்தை சேர்ந்த வைஷ்ணவிக்கும் (25), அசோக்குமாருக்கும் (26) 10 நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் நேற்று இருவரும் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது முன்னால் சென்ற ஆட்டோ திடீர் பிரேக் போட்டதால், நிலைதடுமாறி வைஷ்ணவி கீழே விழுந்தார். அதேசமயம் பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியதால், அசோக்குமார் கண் முன்னே அவர் தலை நசுங்கி பலியானார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 15, 2026
மாற்றுத்திறனாளிகளுக்கு அளவீட்டு முகாம்

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு Artificial Limbs Manufacturing corporation of India, (ALIMCO) Auxiliary production Centre வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு அளவீட்டு முகாம் நடைபெறவுள்ளது. மேலும் முகாம் நடைபெறும் விவரங்களை மேலே உள்ளதை படித்து தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
News January 15, 2026
திருவள்ளூரில் இரவு ரோந்து போலீஸ் எண்கள்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.


