News April 14, 2024

இதுதான் எதிர்க்கட்சிகளின் ஒரே நோக்கம்

image

2024 மக்களவைத் தேர்தலை I.N.D.I.A கூட்டணிக்கும் என்.டி.ஏ-வுக்கும் இடையில் நடக்கும் போராக தான் பார்ப்பதாக காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். ஸ்ரீநகரில் பேசிய அவர், “இந்தப் போர் ஒரு தனிநபருக்கு எதிரானதல்ல, பாஜகவின் அரசியல் சூழ்ச்சிகளுக்கு எதிரானது. பாஜகவை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதுதான் எதிர்க்கட்சிகளின் ஒரே நோக்கம். அதற்கு முடிந்த பங்களிப்பைச் செய்வோம்” என்றார்.

Similar News

News November 8, 2025

போலி வாக்காளர்களை சேர்த்த திமுக அரசு: தமிழிசை

image

1947-ல் இருந்து 8 முறை நடந்த SIR பணிகளை எதிர்க்காத திமுக கூட்டணி கட்சிகள், தற்போது PM மோடியின் ஆட்சியில் மட்டும் எதிர்ப்பது ஏன் என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். SIR பணிகள் மூலம் 2 ஆண்டுகளாக திமுக அரசு சேர்த்த போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்றும், அந்த அச்சத்தில் தான் அவர்கள் எதிர்ப்பதாகவும் அவர் சாடியுள்ளார். SIR-க்கு எதிராக போராடுவது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என்று அவர் கூறியுள்ளார்.

News November 8, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் 8, ஐப்பசி 22 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 09:00 AM – 10:30 PM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 07:30 AM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை

News November 8, 2025

இரட்டை இலக்கத்தில் தொகுதி கேட்போம்: CPM

image

வரும் சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதி கேட்க வேண்டும் என்ற எண்ணம் தங்களுக்கு உள்ளதாக, CPM அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாஜகவை வீழ்த்துவது என்ற ஒரு அம்சத்தில் மட்டும்தான் திமுகவுடன் கூட்டணியில் உள்ளதாகவும், மற்ற விஷயங்களில் மாறுபட்ட கொள்கைகளே உள்ளதாகவும் கூறியுள்ளார். முன்னதாக கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் CPM போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!