News September 28, 2025

கள்ளக்குறிச்சி: TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், TNPSC சார்பில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு இன்று (செப்.28) நடைபெறுகிறது. தேர்வு எழுத வருவோர், காலை 8.30 மணிக்குள் தேர்வுக்கூடத்திற்கு வந்துவிட வேண்டும். ஹால் டிக்கெட் மற்றும் புகைப்பட அடையாள அட்டையுடன் வருவது கட்டாயம். செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை. தேர்வு எழுத கருப்பு நிற மை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெற்றிப் பெற வாழ்த்துகள்

Similar News

News January 12, 2026

கள்ளக்குறிச்சி: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்தாலும், அதுகுறித்து உடனடியாக 04151-294600 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 12, 2026

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய ஆட்சியர்!

image

கள்ளக்குறிச்சி: குருநாதபுரத்தில், தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்க பணத்தை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் இன்று வழங்கினர். இந்த நிகழ்வில் அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பனேற்று பொங்கல் தொகுப்பினை பெற்றுச் சென்றனர்.

News January 12, 2026

முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா

image

கள்ளக்குறிச்சி: முத்தமிழ் சங்கம் கட்டிடத்தில், முத்தமிழ் சங்கம் சார்பில் பொங்கல் விழா, கவியரங்கம் திருக்குறள் திருவிழா, கவிஞர் வெண்ணிலாவின் நூல் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இந்த முப்பெரும் விழாவிற்கு மாவட்ட முத்தமிழ் சங்கத் தலைவர் முருககுரு வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக சங்கராபுரம் திமுக ஒன்றிய செயலாளர் ஆறு கதிரவன் கலந்துகொண்டார்.

error: Content is protected !!