News September 28, 2025
விஜய் கைதாவாரா? CM ஸ்டாலின் விளக்கம்

கரூர் பரப்புரை கூட்டத்தில் குழந்தைகள் உட்பட 39 பேரின் உயிர்கள் பறிபோன நிலையில், விஜய் கைது செய்யப்படுவாரா என CM ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் விளக்கம் அளித்தார். மேலும், உங்களின் யூகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என சொல்லிவிட்டு அங்கிருந்த சென்றார்.
Similar News
News January 16, 2026
உடனடி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துக: EPS

கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் கோரிக்கைகளை மறுத்து, அவர்களை கைது செய்த திமுக அரசுக்கு EPS கண்டனம் தெரிவித்துள்ளார். கூலி உயர்வு, மின் கட்டண சலுகை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய கறிக்கோழி வளர்ப்பு பண்ணை விவசாயிகளை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும், அவர்களையும், கறிக்கோழி நிறுவனங்களையும் அழைத்து உடனடி முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News January 16, 2026
ஒரு நிமிடத்தில் இவ்வளவு நடக்குதா?

உலகம் ஒவ்வொரு நிமிடத்திற்கும் பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது. வெறும் 60 விநாடிகளில் ஏராளமான புதிய உயிர்கள் பிறக்கின்றன, தேனீக்கள் டன் கணக்கில் தேனை உருவாக்குகின்றன. அதே நேரத்தில், மனிதர்கள் கைப்பேசி திரையில் மூழ்கி, காடுகளை அழித்து, கழிவுகளை குவிக்கின்றனர். நேரத்தின் மதிப்பு எவ்வளவு பொன்னானது என்பதை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News January 16, 2026
ஒரே நாளில் மளமளவென குறைந்தது

பொங்கல் விடுமுறையான இன்று (ஜன.16) தங்கம் விலை முதல்முறையாக குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹480 குறைந்து ₹1,05,840-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி 1 கிராம் 4 குறைந்து ₹306-க்கும், கிலோ வெள்ளி ₹3,06,000-க்கும் விற்பனையாகிறது. எனவே, பொங்கல் சீர், சுப முகூர்த்த தினத்திற்கு நகைகள் வாங்க நினைத்தோர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.


