News September 28, 2025

BREAKING: உயிரிழந்தோர் உடல்களுக்கு ஸ்டாலின் அஞ்சலி

image

விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரின் உடல்கள் கரூர் மருத்துவமனையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து இரவோடு இரவாக கரூர் சென்ற ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதன்பின் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

Similar News

News September 28, 2025

மூட்டு வலியை விரட்டும் மூலிகை தேநீர்!

image

மூட்டு வலியைப் போக்கவும், வாத நோய்களைக் கட்டுப்படுத்தவும் முடக்கத்தான் கீரை டீ உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். *முடக்கத்தான் கீரையை நன்றாகக் கழுவி, நீரில் கொதிக்க வைக்கவும் *இதில் மிளகு & சீரகத்தையும் சேர்த்துக் கொதிக்க விடலாம் * 3-5 நிமிடங்கள் வரை கொதிக்கவிட்டு, பின்னர் வடிகட்டி தேவைப்பட்டால் தேன் கலந்து பருகலாம். SHARE IT.

News September 28, 2025

இது போன்று இன்னும் பல உயிர்களும்..

image

மரணமடைந்தவர்களின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழும் ஓலம்தான் தமிழ்நாடு முழுவதும் ஒலிக்கிறது. இந்த துயர சம்பவத்தில் கவனிக்கவே படாமல், கால் மிதிகளில் சிக்கி, குப்பைகளுக்கு மத்தியில் உயிரிழந்து கிடக்கும் பூனை ஒன்றின் பரிதாப நிலை, மனதை உலுக்குகிறது. இது போன்று இன்னும் பல வாயில்லா ஜீவன்களும் உயிரை இழந்திருக்கலாம்.
<<-se>>#karurstampede<<>>

News September 28, 2025

பச்சிமோத்தாசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்!

image

பச்சிமோத்தாசனம் செய்வதால் உடலில் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும். படபடப்பு, டென்சன் நீங்கி மன அமைதி உண்டாகும். இதனை செய்ய முதலில், கால்களை நேராக நீட்டி உட்காரவும். அடுத்து முன்னோக்கி குனியுங்கள். இரு கால் கட்டை விரல்களையும் கொக்கி போல் பிடித்துக்கொண்டு, நெற்றியால் கால் முட்டிகளை தொட வேண்டும். இதே நிலையில் இருந்துகொண்டு 1-10 வரை எண்ணவும். பின்னர் ரிலாக்ஸ் செய்யவும்.

error: Content is protected !!