News September 28, 2025
கரூர் துயரம்: உதவி எண்கள் அறிவிப்பு

தவெக கூட்டத்தில் நடைபெற்ற துயரத்தால், இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை அறிய, அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 04324-256306, 7010806322 உள்ளிட்ட எண்கள் அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளன. கூட்டத்தில் குழந்தைகள் சிலர் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News September 28, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 472 ▶குறள்: ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
▶பொருள்: ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை.
News September 28, 2025
விஜய் வீட்டுக்கு முன் குவியும் தவெக தொண்டர்கள்

கரூர் ஹாஸ்பிடலில் விடிய விடிய கதறல் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்த துயரத்திற்கு மத்தியில் விஜய் சென்னை வந்தடைந்த நிலையில், அவரின் வீட்டு முன், தவெக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். ஒருபுறம் போலீசார், மறுபுறம் தவெக தொண்டர்கள் சூழ்ந்துள்ளதால், பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் தவெக முக்கிய நிர்வாகிகள் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்வார்கள் என கூறப்படுகிறது.
News September 28, 2025
உங்க கிட்னி எப்படி… நீங்களே சோதித்து பார்க்க TIPS

சிறுநீரகம் பாதிப்பிற்குள்ளாகி இருப்பதை நமது உடல் சில அறிகுறிகள் மூலம் நமக்கு உணர்த்தும். *எப்போதும் சோர்வாக இருப்பது, போதுமான உறக்கம் இல்லாதது. *வறண்ட சருமம், பாதங்கள் வீங்குவது, கண்களைச் சுற்றி வீக்கம். *தசைகளில் வலி, சுவாசிப்பதில் சிக்கல், சிறுநீர் வெளியேற்றுவதில் சிரமம். முக்கியமான இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். நண்பர்களுக்கும் இதை SHARE செய்யுங்கள்.