News September 28, 2025
கரூர் கூட்ட நெரிசல்: 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 38 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தவெகவின் கரூர் மாவட்ட தலைவர் மதியழகன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை முயற்சி, மரணம் விளைவிக்கும் செயல் செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகள் கீழ் அவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. மேலும் மதியழகனிடம் காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
Similar News
News September 28, 2025
உங்க கிட்னி எப்படி… நீங்களே சோதித்து பார்க்க TIPS

சிறுநீரகம் பாதிப்பிற்குள்ளாகி இருப்பதை நமது உடல் சில அறிகுறிகள் மூலம் நமக்கு உணர்த்தும். *எப்போதும் சோர்வாக இருப்பது, போதுமான உறக்கம் இல்லாதது. *வறண்ட சருமம், பாதங்கள் வீங்குவது, கண்களைச் சுற்றி வீக்கம். *தசைகளில் வலி, சுவாசிப்பதில் சிக்கல், சிறுநீர் வெளியேற்றுவதில் சிரமம். முக்கியமான இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். நண்பர்களுக்கும் இதை SHARE செய்யுங்கள்.
News September 28, 2025
விஜய் கைதாவாரா? CM ஸ்டாலின் விளக்கம்

கரூர் பரப்புரை கூட்டத்தில் குழந்தைகள் உட்பட 39 பேரின் உயிர்கள் பறிபோன நிலையில், விஜய் கைது செய்யப்படுவாரா என CM ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் விளக்கம் அளித்தார். மேலும், உங்களின் யூகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என சொல்லிவிட்டு அங்கிருந்த சென்றார்.
News September 28, 2025
அரசியல் கூட்டங்களில் ரத்த வெள்ளம்.. இனியாவது மாறுமா?

அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மக்களின் உயிரையும் தியாகம் செய்ய அரசியல் தலைவர்கள் தயங்குவதில்லை. மக்கள் மத்தியில் நாங்கள் மிகவும் பிரபலமானவர்கள்; எங்களுக்குத்தான் அதிக கூட்டம் வருகிறது என்பதை காட்ட, அரசியல் கட்சிகள் குறுகிய சாலைகளில் பெரும் கூட்டத்தை கூட்டுகின்றன. இதனால், பல உயிர்கள் பறிபோய், அவர்களின் குடும்பம் நிற்கதியற்று தவிக்கின்றன. கரூர் துயரத்திற்கு பிறகாவது இந்த நிலை மாறுமா என பார்ப்போம்.