News September 28, 2025

கரூரில் இன்று முழு கடையடைப்பு

image

விஜய்யின் அரசியல் பரப்புரையில் ஏற்பட்ட அசம்பாவிதத்தால் கரூர் நகரமே கண்ணீரில் மூழ்கியுள்ளது. உறவுகளை இழந்த பலர் மருத்துவமனையில் கதறும் காட்சிகள் காண்போரின் இதயத்தை நொறுக்குகிறது. இதனிடையே கரூர் மாவட்டம் முழுவதும் இன்று(செப்., 28) அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 28, 2025

விவரிக்க முடியா துயரில் உள்ளேன்: ஸ்டாலின்

image

கரூர் அசம்பாவிதத்தால் உயிரிழந்தவர்களுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த CM ஸ்டாலின் விபரிக்க முடியாத துயரத்தில் உள்ளதாக கூறினார். அரசியல் கட்சிக் கூட்டத்தில் இதுவரை இதுபோன்ற அசம்பாவிதம் நடைபெறவில்லை என கூறிய அவர் இனிமேலும் இதுபோல் நடக்கக்கூடாது எனவும் குறிப்பிட்டார். காயமடைந்தவர் விரைவில் குணமடைவார்கள் என நம்புவதாகவும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை எனவும் தெரிவித்தார்

News September 28, 2025

நெரிசலான இடத்தை ஒதுக்கியது ஏன்? அதிமுக

image

விசாலமான கரூர் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா பகுதியில் விஜய்க்கு, அதிமுகவுக்கு போலீஸ் அனுமதியளிக்கவில்லை என அதிமுக MP இன்பதுரை குற்றம்சாட்டியுள்ளார். நெரிசலான வேலுசாமிபுரத்தை எதிர்க்கட்சிகளுக்கு ஒதுக்கியது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இடவசதியுள்ள ரவுண்டானா பகுதியில் ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் மட்டும் ஒதுக்கியது எப்படி எனவும் கேட்டுள்ளார்.

News September 28, 2025

BREAKING: உயிரிழந்தோர் உடல்களுக்கு ஸ்டாலின் அஞ்சலி

image

விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரின் உடல்கள் கரூர் மருத்துவமனையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து இரவோடு இரவாக கரூர் சென்ற ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதன்பின் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

error: Content is protected !!